கணவனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் பெண்ணை கூலிப்படை ஏவி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி கைது

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கோண்டாப்பூரை சேந்தவர் காயத்திரி. இவரது கணவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காயத்திரி பாதிக்கப்பட்ட பெண்ணை கோண்டாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.அப்போது பாதிக்கப்பட்ட பெண் பிப்ரவரி 2022 வரை காயத்திரி தம்பதியினருடன் தங்கி இருந்துள்ளார். அதன் பிறகு தனது கணவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது காயத்திரிக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காயத்திரி ஏப்ரல் 24-ம் தேதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் காயத்திரி சமாதானம் அடையவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை பழிவாங்க கூலிப்படையை அணுகி, அவர்களை அழைத்து வந்து ஒரு அறையில் தங்கவைத்துள்ளார்.பின்னர் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் காயத்திரி அந்த பெண்ணை வீட்டின் மற்றொரு அறைக்கு அழைத்து சென்று கூலிப்படையால் தாக்கியுள்ளார். அதன் பின்னர் கூலிப்படையினர் அந்த பெண்ணை துணியால் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை காயத்திரி தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார்.மேலும் நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என பாதிக்கப்பட்ட பெண்ணை காயத்திரி மிரட்டியுள்ளார். கூலிப்படையினர் தாக்கியதில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து காயத்திரி மற்றும் 4 இளைஞர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். …

Related posts

மகாராஷ்டிரா, குஜராத் கால்சென்டர்களில் சிபிஐ சோதனை: 26 சைபர் குற்றவாளிகள் கைது

பட்டாசு விபத்துக்கு பாதுகாப்பு வசதி இல்லாததே காரணம்: நீதிபதிகள் வேதனை

புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க நாணயம் விற்று மோசடி அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது