கட்டுப்பாடுகள் நீக்கம் எதிரொலி!: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது..!!

சென்னை: கொரோனா அச்சம் குறைந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவு பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் ஒரேநாளில் 500 விமானங்களை இயக்கி சென்னை விமான நிலையம் சாதனை படைத்தது. மும்பை, டெல்லி விமான நிலையங்களுக்கு அடுத்து இந்த சாதனை பட்டியலில் சென்னை விமான நிலையமும் இணைந்தது. இதனையடுத்து 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதை சூழலில், விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 74 சர்வதேச விமானங்களும், 328 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படுகின்றன. இம்மாதம் முதல் மேலும் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் புதிதாக இயக்கப்பட இருப்பதால் அடுத்த சில நாட்களில் விமான பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை