கட்டிமேடு அரசு பள்ளி மாணவர்கள் சிவன் கோயிலில் உழவாரப்பணி

 

திருத்துறைப்பூண்டி, செப். 30: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சேகல் மடப்புரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் தூய்மை பணி மேற்கொண்டனர். சேகல் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 28ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. 2ம் நாள் நிகழ்ச்சியாக சேகல் மடப்புரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் தூய்மை பணியை சேகல் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி துவக்கி வைத்தார்.

நாட்டு நல பணித்திட்ட மாணவர்களால் கோயிலை சுற்றி தூய்மை பணி மற்றும் நெகிழி பொருட்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டு நல பணி திட்ட முகாம் அலுவலர் சந்திரசேகரன், உதவி திட்ட அலுவலர் அப்துல் யாசர் அரபாத், ஆசிரியர் ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Related posts

கொருக்குப்பேட்டையில் பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட சிறுவர்கள் உட்பட 5 பேர் மயக்கம்: கடைக்கு சீல்; மாதிரி சேகரித்து ஆய்வு

ஸ்மார்ட் போன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்