கட்டப்பெட்டு பகுதியில் சாலை விரிவாக்க பணியில் தொய்வு

கோத்தகிரி: கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில் கட்டப்பெட்டு பகுதியில் சாலை விரிவாக்க பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், விரைவில் சாலை பணியை நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கட்டப்பெட்டு பகுதி. இப்பகுதியில் சமீப காலமாக நெடுஞ்சாலை துறை மூலம் சாலை விரிவாக்கம் பணி மற்றும் சாலையோர தடுப்புச்சுவர் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் நெடுஞ்சாலையும் உதகை, குன்னூர் மற்றும் குக்கிராமங்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக உள்ள கட்டப்பெட்டு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை அருகே மிகவும் ஆபத்தான வளைவு பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவு பெறும் நிலையில் முழுமையாக பணி நடைபெறாமல் தொய்வு ஏறப்பட்டு உள்ளது. சில நேரங்களில் விபத்து ஏற்ப்படக்கூடிய ஒரு சூழலலும் உள்ள நிலையில் விரைவாக பணியினை விரைந்து முடிக்க வேண்டும். எனவே முக்கிய பிரதான சாலையாகவும்‍, உதகை, குன்னூர் செல்லும் முக்கிய இணைப்பு சாலையாகவும் உள்ளதால் அதிக வாகனங்கள் தினமும் சென்று வரக்கூடிய நிலையில் பணியில் தொய்வு ஏற்படாமல் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை