கடையை திறக்க அனுமதி கோரி வியாபாரிகள் சாலை மறியல்

தண்டையார்பேட்டை: கொரோனா பரவலை தடுக்க சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி வண்ணாரப்பேட்டை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிங்கார தோட்டம், என்.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அரசு அனுமதித்தது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். மேலும், எம்.சி.சாலையிலுள்ள கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கடைகளை திறக்க அனுமதி கோரி வியாபாரிகள் எம்சி ரோட்டிலுள்ள சிமெட்ரி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திவியாபாரிகளை அங்கிருந்து கலைய சென்றனர்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு