கடையம் அருகே வெவ்வேறு விபத்து மெக்கானிக் உள்பட இருவர் பலி

 

கடையம், மே 31: கடையம் அருகே பைக் மீது வேன் மோதியதில் படுகாயமடைந்த சலூன் கடைக்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம் விகேபுரம் அடுத்த தாட்டான்பட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த பிச்சையாண்டியின் மகன் சண்முகம் (49). இவரது கிராமத்திற்கு அருகேயுள்ள முதலியார்பட்டியில் சலூன் கடை நடத்திவந்த இவர், நேற்று தட்டான்பட்டி கிராமத்தில் இருந்து தனது பைக்கில் புறப்பட்டு ஆலங்குளத்திற்கு சென்றுகொண்டிருந்தார். பொட்டல்புதூர் ஆற்றுப்பாலத்தை கடந்து சென்ற போது எதிரே திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் திருமலைப் பபுரம் பகுதியில் உள்ளவிசேஷ வீட்டில் கலந்து கொண்டு திரும்பிய வேன், இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், விபத்தில் இறந்த சண்முகத்தின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த வெனிஸ்டன் (50) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: கடையம் அருகே பால்வண்ணநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜ் மகன் ராஜ்குமார் (24). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு தனது பைக்கில் பாவூர்சத்திரத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். மாதாபுரம் வந்தபோது எதிரே தென்காசிக்கு சென்ற அரசு பஸ் பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்துவந்த கடையம் போலீசார், ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை ஓட்டிவந்த டிரைவர் முருகானந்தம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை