கடும் உத்தரவு பிறப்பித்தும் தடை செய்த பட்டாசுகள் விற்பனை : உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்தினால் அதற்கு மாநிலங்களின் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில், தடை செய்யப்பட்ட பட்டாசுகள் இன்னமும் உற்பத்தி செய்யப்படுவதாக அறிக்கைகள் தெளிவாக தெரிவிக்கிறது. குறிப்பாக பட்டாசு வழக்கில் தீபாவளி சமயங்களில் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் பின்னர் அது பின்பற்றப்படுகிறதா என்றால், அது கேள்விக்குறியாக தான் உள்ளது. பட்டாசு விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை, நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான நிபந்தனைகள் ஆகிய அனைத்தையும் மீறி தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமில்லாமல், சந்தைகளில் விற்பனையும் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்’’ என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர்….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி