கடல் போல நிரம்பிய குளம்

 

ஈரோடு, மார்ச் 14: மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாநகராட்சி காமராஜ் வீதி துவக்கப்பள்ளியில் நேற்று காலை மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு கவுன்சிலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். 36-வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில் பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக தலைமையாசிரியை நாகரத்தினம் வரவேற்புரையாற்றினார். பேரணியில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின் போது வீடு வீடாக சென்று துண்டறிக்கை விநியோகித்து மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை