கடல் நீரோட்டத்தில் மாற்றம் கோடியக்கரையில் திடீர் சூறாவளி 50 அடி உயரத்துக்கு பறந்த வலைகள்

வேதாரண்யம்: கோடியக்கரையில் இன்று திடீரென வீசிய சூறாவளியில் 50 அடி உயரத்துக்கு வலைகள் பறந்தன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கோடியக்கரை கடலில் இன்று காலை நீரோட்டத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. மேலும்  காலை 7 மணியளவில் கடலில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்று கடலில் இருந்து தரையை நோக்கி வந்தது. அப்போது கடற்கரையில் வைத்திருந்த வலைகள், 50 அடி தூரத்திற்கு மேலே பறந்து சென்று கீழே விழுந்தது. மேலும் கடற்கரையோரம் இருந்த கீற்று கொட்டைகள் காற்றில் பறந்தன. இதை பார்த்து மீனவர்கள் அச்சமடைந்ததுடன் கூச்சல் போட்டனர். சுமார் 5 நிமிடம் வரை வீசிய இந்த சூறைக்காற்றால் கடற்கரை பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. சூறாவளியை கடற்கரையில் நின்ற மீனவர்கள் எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!