கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மழை.: மரம் விழுந்ததில் பைக்கில் சென்றவர் நசுங்கி உயிரிழப்பு

கடலூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வளவனூர், கண்டனங்கள் மற்றும் விக்கிரவாண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களில் நள்ளிரவில் லேசாக தொடங்கிய மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கனமழையாக கொட்டித்தீர்த்தது. தற்போது விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைநீர் சாலையில் தேங்கி உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். புதிய பேருந்து நிலையத்தில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை கனமழையாக மாறிக்கொட்டியது. இதனால் கடலூர்-புதுச்சேரி சாலையில் பழமையான மரம் ஒன்று வேருடன் சாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற குமரன் என்ற வியாபாரி நிகழ்விடத்திலேயே நசுங்கி உயிரிழந்தார். அதனையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த மரத்தை அகற்றி அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

Related posts

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் கைது..!!