கடமலைக்குண்டு பகுதியில் பப்பாளி சாகுபடி பணி தீவிரம்

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பொன்னன்படுகை, குமணன்தொழு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பப்பாளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பப்பாளி சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் அதிக விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பப்பாளி காய்களை சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் விவசாய நிலங்களுக்கு சென்று மொத்தமாக கொள்முதல் செய்து சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்கிறார்கள். இதனால் பப்பாளி சாகுபடி அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடமலைக்குண்டு விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், பப்பாளி சாகுபடியால் விவசாயிகள் அதிகளவில் பயன் அடைகிறார்கள். எனவே நோய் பூச்சிகளில் இருந்து பப்பாளி காய்களை பாதுகாக்க ஒவ்வொரு நிலங்களுக்கும் விவசாயத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்….

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி