கடன் தொல்லையால் அதிகாரி தற்கொலை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள திருச்சுழி ரோடு அருகே கருப்பையாத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சி.சி.முருகன் (55). மனைவி சசிகலா (50). இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியில், முருகன் தலைமை அஞ்சல் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிவரை குடும்பத்தினருடன் முருகன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் அறைக்கு தூங்க சென்றவர் நேற்று பகல் 12 மணி வரை எழுந்திருக்கவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அங்கு, முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், முருகனுக்கு அதிக கடன் தொல்லை இருந்ததால், மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு