கடன் தொகைக்காக பெண்ணை வெளியே அனுப்பி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்

முஷ்ணம், ஜூன் 1: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (38). இவரது மனைவி ரேணுகா (33). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது தங்கை திருமண செலவுக்காக சிலம்பரசன் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் வாங்கி தவணை தொகை செலுத்தி வந்தார். இன்னும் ஒரு சில தவணைகள் பாக்கி உள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் ஆகியோர் சிலம்பரசனின் வீட்டுக்கு வந்து சிலம்பரசன் எங்கே என்று அவரது மனைவி ரேணுகாவிடம் கேட்டுள்ளனர்.அவர் வெளியே சென்றிருப்பதாக கூறினார்.

இதையடுத்து மேலாளர் மற்றும் ஊழியர்கள் கடன் பாக்கிக்காக வீட்டை பூட்டுகிறோம் என்று கூறி, வீட்டில் மாவு அரைத்துக் கொண்டிருந்த போது கிரைண்டரை நிறுத்தக் கூட அனுமதிக்காமல் ரேணுகாவை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு பைக்கிற்கு போடும் ரோப் பூட்டு மூலம் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இது குறித்து சிலம்பரசன் முஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், சிதம்பரத்தில் உள்ள தனியர் நிதி நிறுவனத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில் இன்னும் ரூ.1.20 லட்சம் மட்டுமே தவணை தொகை செலுத்த வேண்டி உள்ளது. கொரோனா காலத்தில் வேலையின்மை காரணமாக இத்தொகையை செலுத்த முடியவில்லை. இதற்குள் நிதி நிறுவன மேலாளர் என் வீட்டுக்கு வந்து வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது மனைவியை வெளியே அனுப்பிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நிதி நிறுவன பிரதிநிதிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் சிதம்பரம் வீட்டுக்கு சென்று நிதி நிறுவன மேலாளரால் போடப்பட்ட பூட்டை உடைத்து சுமார் ஒரு மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரை நிறுத்தினர். இந்நிலையில் நேற்று தனியார் வங்கி மேலாளர் விஜயகுமாரிடம் முஷ்ணம் காவல் சப்-இன்ஸ்பெக்டர் தேவி விசாரணை நடத்தியதில், சிலம்பரசன் கொடுக்க வேண்டிய மீதி தொகை ரூ.1.20 லட்சத்தை மூன்று மாதத்தில் செலுத்த வேண்டும்.

Related posts

திருச்சி, மாநகராட்சியில் 13 வார்டுகளுக்கு மண் அள்ளும் இயந்திரம் வழங்கல்

மணப்பாறை அருகே காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு

வையம்பட்டி பகுதியில் முறைகேடாக பயன்படுத்திய 9 மின் இணைப்புகளுக்கு ரூ.63,482 அபராதம்