கடந்த மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்

மாதாந்திர கார் விற்பனை விவரங்களை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் விவரம் வருமாறு:பலேனோ: கடந்த மாதம் 19,369 மாருதி சுசூகி பலேனோ கார்கள் விற்பனையாகி யிருந்தன. முந்தைய ஆண்டு செப்டம்பரில் 8,077 கார்கள் மட்டுமே விற்கப்பட்டன. இத்துடன் ஒப்பிடுகையில் 140 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது.ஹூண்டாய் கிரெட்டா: நடுத்தர எஸ்யுவி கார்களில் கிரெட்டாவுக்கு முக்கிய இடம் உள்ளது. கடந்த மாதம் 12,866 கிரெட்டா கார்கள் விற்பனையாகின. முந்தைய ஆண்டு செப்டம்பரில் 8,193 கார்கள் மட்டுமே விற்றன. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 57 சதவீதம் உயர்ந்துள்ளது.சுசூகி ஸ்விப்ட்: இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் காராக ஸ்விப்ட் உள்ளது. கடந்த மாதம் 11,988 ஸ்விப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் 2,520 கார்கள் விற்பனையானது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 375.7% உயர்ந்துள்ளது.ஆல்டோ: மாருதி சுசூகி நிறுவனம் கடந்த மாதத்தில் 24,844 ஆல்டோ கார்களை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 105 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு செப்டம்பரில் 12,143 காரகள் விற்பனையாகியிருந்தன.பிரஸ்ஸா: கடந்த மாதம் 15,445 மாருதி சுசூகியியின் பிரஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. முந்தைய ஆண்டு 1,874 கார்கள் மட்டுமே விற்பனையாகின. இதன்மூலம் கடந்த மாதம் இந்த காருக்கு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.மாருதி சுசூகி ஈகோ: மாருதி சுசூகியின் ஈகோ கார்கள், 12,697 விற்பனையாகின. கடந்த சில மாதங்களாகவே இந்த கார்கள் 10,000 எண்ணிக்கைக்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 7,844 கார்கள் விற்கப்பட்டன. விற்பனை 61.8% உயர்ந்துள்ளது.வேகன் ஆர்: மாருதி சுசூகியின் வேகன் ஆர் 20,078 கார்கள் கடந்த மாதம் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டு இதே மாதம் 7,632 கார்கள் விற்பனையாகின. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 163 சதவீதம் உயர்ந்துள்ளது.டாடா நெக்ஸான்: கடந்த மாதம் டாடா மோட்டார்சின் நெக்சான் கார்கள், 14,518 விற்பனையானது. இரண்டு இன்ஜின் வேரியண்ட்கள் மற்றும் ஆட்டோமேட்டிக், மேனுவல் கியர் பாக்ஸ்களில் கிடைக்கிறது. டாடா கார்களில் நெக்சான் அதிக வரவேற்பு பெற்ற காராக உள்ளது.டாடா பஞ்ச்: டாடா மோட்டார்ஸ் தயாரிப்பில் அதிக விற்பனையாகும் 2வது காராக உள்ளது. கடந்த மாதம் 12,251 டாடா பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் வெனு: கடந்த மாதத்தில் 11,033 வெனு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 7,924 கார்கள் விற்பனையாகின. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 39.2 சதவீதம் உயர்ந்துள்ளது….

Related posts

ரிமோட் கண்ட்ரோல்

விண்கலம் (Spacecraft)

கார் நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிப்பு