கடத்தல் ரேஷன் அரிசி 2500 கிலோ பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப்பிரிவு ஆய்வாளர் தன்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சிக்னல் அருகே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த மினி லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கானத்தூர் பகுதியை சேர்ந்த மெபத்ஷா(38) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தலில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தவுலத்(48) என்ற பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாகவும், இவர்கள் வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை ஆந்திராவுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 2500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். …

Related posts

தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி