கடத்தல் மணல் மூட்டைகளுடன் கார் பறிமுதல்

 

பாகூர், அக். 23: பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கார் மூலம் மணல் கடத்தப்பட்டு சித்தேரி-குருவிநத்தம் வழியாக கொண்டு செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாகூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்த டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்திச் சென்றனர். போலீசார் துரத்துவதை கண்ட டிரைவர், காரை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

பின்னர் போலீசார் அந்த காரை சோதனை செய்ததில் 35க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை