கடசோலை பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

 

ஊட்டி, ஜூன் 28: கோத்தகிரி அருகேயுளள கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். சோலூர் மட்டம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர்கள் வினோத் மற்றும் ராஜலிங்கம் ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பாலசுப்ரமணி, ரெனிதா பிரபாவதி, கீதாமணி, ரஞ்சிதா, பிரியா கலந்துக் கொண்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி