கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கோத்தகிரி, அக்.22: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிவுறுத்தலின் படி குன்னூர் டிஎஸ்பி தலைமையில் கோத்தகிரி ஆய்வாளர் ஜீவானந்தம், உதவி ஆய்வாளர்கள் வணக்குமார், யுவராஜ் தலைமையில் காவலர்கள் சுரேந்தர், மகேந்திரன், கௌதம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கொட்டக்கம்பை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருநிறைச்செல்வன் (44), கோபிநாத் (29), அகில் (24) ஆகியோர், சுமார் 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி