கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 5 பேர் கைது

 

திருக்கனூர், ஜூலை 17: திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா ஆகியோர் தலைமையில் கிரைம் போலீசார் பழனிச்சாமி, ரமேஷ், வினோத்குமார் ஆகியோர் புதுவை – தமிழக எல்லை பகுதிகளில் மப்டி உடையில் கஞ்சா விற்பனையை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருக்கனூர் அடுத்த சோம்பட்டு சாராயக்கடை அருகே கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் நிற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் வாதானூர் பாட்டை தெருவை சேர்ந்த சரண் ராஜ் (19), கண்டமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் (25) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 166 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் எல்லை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அவர்களது கூட்டாளிகளான திண்டிவனம் அருகே கண்ணியம் ரெட்டியார் தெருவை சேர்ந்த விக்கி (20), விழுப்புரம் மாவட்டம் எறையூரை சேர்ந்த ஜெயக்குமார் (24) மற்றும் 16 வயது சிறுவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை