கஞ்சா விற்றவர் கைது 3 கிலோ பறிமுதல்

தர்மபுரி, மே 14: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பெரிய ஏரிப்பகுதியில் மது விற்பதாக, அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி விட்டார். பிடிபட்டவரை கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன்(49) என்பதும், கஞ்சா பதுக்கி விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3.300 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை