கஞ்சா விற்பனை செய்த 10 பேர் கைது

மதுரை அலங்காநல்லூர்: பாலமேடு அருகே அய்யனார் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் எஸ்.ஐக்கள் அண்ணாதுரை, சரஸ்வதி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு டூவீலர்களை நிறுத்தி அவற்றில் இருந்த ஏழு பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. சத்திரவெள்ளாளபட்டியைச் சேர்ந்த ஜோதிமணி (42), சிவா(28), பாசிங்காபுரம் சுரேஷ் (28), மதுரை, ஆரப்பாளையம் கார்த்திக்(26), கூடல்நகர் கார்த்திகேயன்(31), ராஜாக்கால்பட்டி பிரகாஷ் (30), சங்கர் (23) ஆகிய அவர்கள் டூவீலர்களில் சென்று பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது உறுதியானது. இதையடுத்து போலீசார் ஏழு பேரையும் கைது செய்தனர். மதுரை கீரைத்துறை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(30), கீரைத்துறையைச் சேர்ந்த வசந்தகுமார்(24), சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு அருகேயுள்ள சுப்புலாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன்(20) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து