கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஓபெக் நாடுகள் முடிவு தவறானது: அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க செய்ய பெட்ரோலியம் உற்பத்தியை நவம்பர் மாதம் முதல், நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் அளவு குறைக்க ஓபெக் நாடுகள் (கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள்) கடந்த 5ம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவு எடுத்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜூன் பியரி, “ஓபெக் நாடுகளின் முடிவு தவறானது. இந்த உற்பத்தி குறைப்பு ரஷ்யாவிற்கு ஆதரவாகத்தான் உள்ளது. இந்த உற்பத்தி குறைவால் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படும். உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் ஓபெக் இந்த முடிவை எடுத்துள்ளது. குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். சவுதி அரேபியா உடனான உறவை அதிபர் பைடன் மறுபரிசீலனை செய்ய உள்ளார்,’ என்று தெரிவித்தார்….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு