கங்கனா மீது மீண்டும் போலீசில் புகார்

புதுடெல்லி: மும்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாரத் சிங், அவரது வழக்கறிஞர்கள் ஆஷிஷ் ராய் மற்றும் அங்கித் உபாத்யாய் மூலம் விலே பார்லே காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘பாலிவுட் நடிகை கங்கனா ராவத், டிவி நேரடி நேர்காணல் நிகழ்ச்சியின் போது இந்திய குடிமக்கள், முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னாள் தலைவர்களின் கண்ணியம் மற்றும் மரியாதையை குறைக்கும் வகையிலும், அரசியலமைப்புக்கு எதிரான கருத்தை தெரிவித்தார். கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று தெரிவித்தார். இது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை அவமதிக்கும் கருத்தாகும். எனவே, அவரது பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும்; அவர் மீது எம்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கங்கனா மீது வழக்கு பதிவு செய்வது குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதே பிரச்னைக்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன், கங்கனா மீது எப்ஐஆர் பதியக்கோரி மும்பை காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

குரங்கம்மை தாக்கம் எதிரொலி.. மாவட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்க : மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக மம்தாவின் மருமகன் தொடர்ந்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெண் மருத்துவர் கொலை நடந்து ஒரு மாதம் நிறைவு; மேற்குவங்கத்தில் விடியவிடிய போராட்டம்: மம்தா அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு