ஓவிய சந்தையில் பங்கேற்க கலைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு

 

கோவை, அக். 18: தமிழ்நாட்டின் நுண்கலைகளையும், நிகழ்த்து கலைகளையும் போற்றி பாதுகாத்து வளர்த்து வரும் அரசு ஓவியசிற்பக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் அதிகளவில் ஓவிய, சிற்ப கலைபடைப்புகள் இடம் பெறும் வகையில் சந்தை நடத்திட ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் ஓவிய, சிற்ப படைப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்து அதன் வாயிலாக ஓவிய சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரம் உயர்த்துதல், கலைஞர்களை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் கோவையில் ஓவிய சந்தை நடத்தப்படவுள்ளது. இந்த ஓவிய சந்தையில் தமிழ்நாட்டினை சேர்ந்த கலைஞர்களின் 500 கலை படைப்புகளும், பிறமாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் 500 கலை படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும், ஓவிய சந்தையில் கலைப்படைப்புகளை விற்பனை செய்ய ஏதுவாக விற்பனை அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன. எனவே, ஓவிய சந்தையில் தங்களது கலைப்படைப்புகளான ஓவிய மற்றும் சிற்ப கலை படைப்புகளின் வண்ண புகைப்படங்கள் (அஞ்சல் அட்டைஅளவில்) மற்றும் தன் விவர குறிப்புடன் உதவி இயக்குநர், மண்டல கலைபண்பாட்டுமையம், அரசு இசைக்கல்லூரி வளாகம், செட்டிப்பாளையம் சாலை, மலுமிச்சம்பட்டி, கோவை-641050 என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு 0422-2610290 அல்லது அலைபேசி எண் 89253-57377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி தெரிவித்துள்ளார்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்