ஓய்வூதியர்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

தேனி, டிச. 20: தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் வகையில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத்தினர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 2024 ஜன.19ம் தேதி காலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் மற்றும் தேனி மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடக்க உள்ளது.

எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கத்தினர் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட ஆட்சியர்அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு வரும் 2024 ஜன.8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் நடக்கும் நாளன்று தேனி மாவட்டத்தில் கோரிக்கை நிலுவையில் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து