ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் வரவேற்பு

சென்னை: ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கடந்த ஜூலை 29-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையின் படி மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்தலாம் என ஆணையிட்டான். மேலும், மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். அதனையடுத்து பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை இந்தாண்டு கடைபிடிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவிக்கு மருத்துவ அலுவலர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. வழக்கில் வெற்றி பெற உதவிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனுக்கும் நன்றி என்றும், மேலும் ஓ.பி.சி. இடஒதுக்கீட்ட்டுக்காக போராடிய அனைத்து தலைவர்களுக்கும்  நன்றி எனவும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்