ஓபிஎஸ், மகன் மீதான வழக்கில் புகார் அளித்தவரிடம் 2 மணி நேரம் விசாரணை

தேனி: ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் மீதான வழக்கில், புகார்தாரரிடம் குற்றப்பிரிவு போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். தேனி மாவட்டத்தில் 2019 எம்பி தேர்தலில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத், 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்புமனு தாக்கலின் போது விவரங்களை மறைத்ததாக மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி புகார் அளித்தார். இதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஓபிஎஸ், அவரது மகனான தேனி எம்பி ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து புகார்தாரர் மிலானியிடம் எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுந்தரராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி  ஆகியோர் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, வேட்புமனுத்தாக்கலில் விடுபட்ட விவரங்கள், விடுபட்ட சொத்துக்களின் விவரங்கள், செலவு கணக்குகளை விசாரித்ததாகவும், விரைவில் விசாரணை அறிக்கை தயாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வழக்கில் புகார்தாரர் மிலானிக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிலானி கோரினால் பாதுகாப்பு தரப்படும் என போலீசார் தெரிவித்தனர்….

Related posts

மெரினாவில் விமானப்படை சாகசத்தைக் காண வந்தவர்களில் உயிரிழந்த 5 பேருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்