ஓசூர் வசந்த நகரில் திட்டப்பணிகளை மேயர் ஆய்வு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 11வது வார்டிற்குட்பட்ட வசந்த நகர், ராஜீவ் நகர், ராஜேஸ்வரி நகர், தாயப்பா திருமண மண்டபம் முதல் ஹிஆர்டி வரை உள்ள ராஜ கால்வாய் பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ₹87லட்சம் மதிப்பீட்டில், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மேயர் சத்யா, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், உயரம், அகலம் குறித்தும், கழிவு நீர் கால்வாய், தெரு விளக்கு, குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். பின்னர், குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். ஆய்வின் போது, மண்டல குழு தலைவர் ரவி, கவுன்சிலர் மாரக்கா சென்னீரன், நாகராஜ், வார்டு திமுக நிர்வாகிகள் கோபி, பாபு, சுரேஷ், புனித், ராஜா, எல்லாப்பா, ஆயூப் கான் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்