ஓசூரில் மாநில அளவிலான செஸ் போட்டி

ஓசூர்: ஓசூரில் சிப்காட் லைன்ஸ் கிளப் மற்றும் குணம் மருத்துவமனை இணைந்து, முதல் முறையாக மாநில அளவிலான செஸ் போட்டிகளை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 9, 11, 15, 17 மற்றும் 25வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒரு பிரிவாகவும், வெளி நபர்கள் பங்கேற்கும் விதமாக ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ₹1லட்சம் முதல் பரிசாக வழங்கப்பட உள்ளது. இது போன்ற செஸ் போட்டிகள், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே ஊக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஓசூர் சிப்காட் குணம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பிரதீப்குமார், செந்தில், அரிமா சங்க நிர்வாகிகள் ரவிவர்மா, நம்பி, ரமேஷ் பாபு, சீதா ஜெயராமன், நாராயணன், செந்தில்குமார், பிரேம்நாத், பழனிகுமார், பிரதீப்ராஜ், ராஜேஷ் கண்ணன், ரகுராமன், பிரபாகரன், சத்தியசீலன், ராஜசேகரன், ஜெயபாலசந்தடி, லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை