ஓசூரில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

கிருஷ்ணகிரி, நவ.23: இந்திய அரசு மத்திய பனை பொருட்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் மூலம், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 5ம்தேதி துவங்கி, 15ம்தேதி வரை ஓசூர் கிருஷ்ணகிரி பைபாஸ், பழைய மீன் மார்க்கெட் அருகில், ஜிஆர்டி., எதிரில் சிசிஇடி கம்ப்யூட்டர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் முதல் தளத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பில்லை.

கல்வித்தகுதி குறைந்தது 8ம் வகுப்பு ஆகும். பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள், 2 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணமாக ₹5,300 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து ₹6,254 செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என தலைமை பயிற்சியாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து