ஒரே காடு ரொம்ப ‘போர்’ புதிய இடங்களை தேடி 30 இளம் புலிகள் ஓட்டம்: பன்னாவில் பெரிசுகள் மட்டுமே தஞ்சம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பன்னா சரணலாயத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட இளம் புலிகள் வேறு வாழ்விடம் தேடி சென்று விட்டதாக மூத்த வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், பன்னாவில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. சாத்னா மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்னு இறந்த புலியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த புலி பன்னா சரணலாயத்தில் இருந்து வெளியேறியது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக சரணாலய இயக்குனர் கூறுகையில், ‘சமீப ஆண்டுகளில் சுமார் 30 முதல் 35 புலிகள் பன்னா சரணாலயத்தை விட்டு  வெளியேறி உள்ளன. தற்போது, 45 முதல் 50 எண்ணிக்கை வரையிலான வயதான புலிகள் மட்டுமே இங்கு உள்ளன. மேலும், ஒரு ஆண்டுக்கு உட்பட்ட குட்டிகள் 25 உள்ளன. மொத்தத்தில் 70 புலிகள் மட்டுமே சரணாயலத்தில் உள்ளன. அதிக எண்ணிக்கை காரணமாக புலிகள் புதிய பிராந்தியங்களை தேடி இடம் பெயர்கின்றன என்பது உறுதியாகி இருக்கிறது,’’ என்றார்….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்