ஒரு சதவீத ஓட்டுகள் கூட இல்லை: கோவா சட்டமன்றத் தேர்தல் களத்திலேயே திரிணாமுல் காங். கட்சி இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து..!

பனாஜி: கோவா சட்டமன்றத் தேர்தல் களத்திலேயே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இல்லை என ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். கோவாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுடன் மேற்குவங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரசும், டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி கட்சியும் களத்தில் குதித்துள்ளன. இதனால், ஆட்சியை பிடிப்பதில் இந்த கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்துவருவதாக நினைக்கிறேன். ஆனால், தற்போது கோவாவில் அக்கட்சிக்கு ஒரு சதவீத ஓட்டுகள் கூட இல்லை. திரிணமுல் காங்., கட்சி 3 மாதத்திற்கு முன்பு தான் கோவாவிற்கு வந்தது. இது ஜனநாயகத்திற்கு சரிபட்டு வராது. அக்கட்சி இன்னும் கடினமாக உழைக்க வேண்டும், மக்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும். நீங்கள் அக்கட்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கலாம், ஆனால் அக்கட்சி தேர்தல் களத்தில் நிற்கவில்லை என்றே நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை