ஒரத்தநாடு போலீசாருக்கு தீத்தடுப்பு செயல்விளக்க பயிற்சி

ஒரத்தநாடு, ஆக. 7: கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்புத்துறை மூலமாக ஒரத்தநாடு போலீசாருக்கு தீத்தடுப்பு செயல்விளக்க பயிற்சி ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று அளிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ஒரத்தநாடு தீயணைப்பு துறை நிலைய பொறுப்பு அலுவலர் அனந்த சயனம் தலைமையில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு எதிர்வரும் பருவ மழை மற்றும் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா, சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை