ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்: 130 பேர் கைது

 

சிவகங்கை, ஆக. 2: சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், பட்ஜெட் ஏழை நடுத்தர மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளிப்பதை கண்டித்தும் மறியல் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசலில் தொடங்கி தலைமை தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செயலாளர் (பொ) கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் கோபால் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நம்புராஜன், நகர் செயலாளர் மதி, இ.கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் மருது, மாதர் சங்க மாநில செயலாளர் கண்ணகி, ராமச்சந்திரன், கங்கைசேகரன், சகாயம், மாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட கட்சியினர் 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்