ஒன்றிய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது,!

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடங்கியது. எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் இன்றும், நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த  போராட்டத்தில் போக்குவரத்து துறை, வங்கி சேவை உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் மின்துறை,தபால்துறை, ரயில்வே துறை, ஊழியர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பணிகள் பாதிக்கும்  கூழல் உருவாகியுள்ளது.ஆட்டோக்கள் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு  போக்குவரத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்….

Related posts

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ராஜினாமா செய்கிறாரா..? கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்

உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு ; கேதார்நாத்தில் 1,500 பேர் தவிப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்