ஒன்றிய அரசுக்கு எதிராக 35வது நாளாக போராட்டம்: விவசாயிகளுக்கு எதிராக பாஜக மறியல்

திருச்சி: ஒன்றிய அரசை கண்டித்து திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  35வது நாளாக இன்று பட்டைநாமமிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றிய பிரதமர் மோடியை கண்டித்தும் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அண்ணாமலைநகரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 34 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 35வது நாளான இன்று அண்ணாமலை நகரில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உடல், நெற்றியில் பட்டை நாமமிட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். முன்னதாக பாஜகவை தொடர்ந்து விமர்சித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு வீட்டு முன் இன்று (15ம் தேதி) பன்றி விடும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜகவினர் தெரிவித்தனர். இதனால் அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜ திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பாஜகவினர் இன்று காலை அய்யாக்கண்ணு வீட்டை முற்றுைகயிட்டு கோஷமிட்டனர். மேலும் அய்யாக்கண்ணு வீட்டு முன் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றுமாறு வலியுறுத்தினர். அப்போது போலீசார் சென்று போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர். இதனால் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கரூர் பைபாஸ் சாலையில் பாஜகவினர் விவசாயிகளுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை