ஒன்றிய அரசுக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 24: மதுரை, நெல்பேட்டையில் ஒன்றிய அரசுக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகரான இவர், கடந்த 1999ம் ஆண்டு மத மாற்றம் தொடர்பான பிரச்னைக்கு எதிராக செயல்பட்டதன் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ராமலிங்கம் வழக்கின் விசாரணை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பலரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர், ஒன்றிய அரசுக்கு எதிராக நேற்று நெல்பேட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி