ஒன்றிய அரசின் பட்ஜெட் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னனியினர் நகல் எரிப்பு போராட்டம்

திருவாரூர், ஆக. 1: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து திருவாரூரில் நேற்று ஐக்கிய விவசாயிகள் முன்னனியினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு உரிய நிதிஒதுக்கப்படாததை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உரிய நிதியினை ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கடந்த மாதம் 27ம்தேதி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான எவ்வித சலுகையும் வழங்கா தது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய நிதி வழங்காதது,

தொழிலாளர்களுக்கு உரிய கூலியை உயர்த்தி அறிவிக்காதது, மாணவர்களுக்கான கல்வி கடன் மற்றும் அக்னி பாத் திட்டத்தை ரத்து செய்யாதது போன்றவற்றினை கண்டித்து திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டமானது நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தம்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பொறுப்பாளர்கள் தியாகராஜன், ராஜசேகர் மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் முருகையன், அனிபா, குண்சேகரன், பழனிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி