ஒன்றிய அரசின் சிறந்த கொள்கைகளால் இந்தியாவில் ட்ரோன் பயன்பாடு அதிகரிப்பு!: விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு சிறப்பான பலன் தரும்.. பிரதமர் மோடி பேச்சு..!!

டெல்லி: ஒன்றிய அரசின் சிறந்த கொள்கைகளால் இந்தியாவில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பிரகதி மைதானத்தில் பிரம்மாண்டமான ட்ரோன் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறவுள்ள பாரத் ட்ரோன் மஹோத்சவத்தில் இந்தியாவில் தயாரான 70 ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதா்கள், ஆயுதப் படை வீரா்கள், ஒன்றிய ஆயுதப் படை வீரா்கள், பொதுத்துறை நிறுவனப் பிரதிநிதிகள், தனியாா் நிறுவனத்தினா் மற்றும் ட்ரோன் புதிய நிறுவனத்தினா் உள்ளிட்ட 1600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்  கலந்து கொண்டுள்ளனர். கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்டோா் ட்ரோன்களின் பல்வேறு பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன் திருவிழாவில் பங்கேற்கும், விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன் ஓட்டிகளுடன்  பிரதமர் மோடி, கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசின் சிறந்த கொள்கைகளால் இந்தியாவில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. விவசாயம், மீன்பிடி தொழில் போன்ற துறைகளில் ட்ரோன்கள் சிறப்பான பலனை தரும். வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பணிகளை ட்ரோன்கள் மிகவும் எளிமையாக செய்கின்றன என்று குறிப்பிட்டார். ட்ரோன் பைலட் சான்றிதழ்கள், தயாரிப்பு அறிமுகங்கள், குழு விவாதங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் டாக்ஸி முன்மாதிரியின் காட்சி போன்றவை நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன. …

Related posts

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பியதாக மாநிலங்களவையில் கூறிய மோடி.. பிரதமர் இதுவரை மணிப்பூர் செல்லவில்லை ஏன்?: காங். ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பதவியேற்பதற்காக 4 நாட்கள் பரோல்!!