ஒன்றாக படித்தபோது காதல் பிரான்ஸ் இளம்பெண்ணை மணந்த காரைக்குடி வாலிபர்: இந்து முறைப்படி தாலி கட்டினார்

காரைக்குடி: பிரான்ஸ் இளம்பெண்ணுக்கும், காரைக்குடி வாலிபருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கலைராஜன் (31). இவர் பிரான்சில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போது, அதே கல்லூரியில் சைக்காலஜி படித்த கெய்ல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர்.இதையடுத்து திருமணத்தை இரு வீட்டாரும் தமிழ் பாரம்பரியப்படி நேற்று காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள கலைராஜன் வீட்டில் நடத்தினர். கெய்ல் தனது பெயரை கயல் என தமிழ் முறைப்படி மாற்றிக் கொண்டார். பிரான்ஸ் பெண் கயலுக்கும், கலைராஜனுக்கும் உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. திருமணம் குறித்து பிரான்ஸ் பெண் கயல் கூறுகையில், ‘‘நாங்கள் படிக்கும்போது 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். தற்போது இந்தியாவில் தமிழக கலாச்சாரப்படி திருமணம் செய்தது சந்தோஷமாக உள்ளது’’ என்றார்….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு