ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

 

திருப்பூர், பிப். 24: ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி மற்றும் போலீசார் ஆத்துப்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ்குமார் (36) என்பதும், விற்பனைக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையிலான கென்னடி, முகம்மது ஷா, சுரேஷ், பாண்டியராஜன் ஆகியோரை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் பாராட்டினார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி