ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7,000கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 20ம் தேதி முதல், பரிசல் ஓட்டிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரிசல்கள் இயக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 5507 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5197கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும், பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 108.60 அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 108.16அடியாக சரிந்தது. நீர்இருப்பு 75.82 டி.எம்.சியாக உள்ளது….

Related posts

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை