ஒகேனக்கல்லில் எம்எல்ஏ ஆய்வு

பென்னாகரம், ஆக.4: ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஜி.கே.மணி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில், ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு என்பதால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விழாவிற்கு வரும் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையம், அமருமிடம், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகள், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பாக குளிக்கும் இடங்கள், பிரதான அருவி, பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை மற்றும் போலீசார் பாதுகாப்பு வசதி ஆகியவற்றை பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பென்னாகரம் டி.எஸ்.பி மகாலட்சுமி, பாமக மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர் அருள், தமிழ் நகரத் தலைவர் சந்தோஷ், மற்றும் நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்