ஐயப்ப பக்தர் வழங்கிய தங்க வாள் சபரிமலை தந்திரியிடம் ஒப்படைப்பு

மேட்டுப்பாளையம்:  திருப்பூர் விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் 10 பவுன் எடை கொண்ட தங்க மற்றும் வெள்ளியாலான வாள்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வழங்க முடிவு செய்தார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வழங்கவுள்ள இந்த இரண்டு வாள்களும் மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராத மூர்த்தி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கிராத மூர்த்திக்கு முன்பாக வைத்து சபரிமலை முன்னாள் மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி தலைமையில் மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த இரண்டு வாள்களும் சபரிமலை தந்திரி மகேஷ் மோகனருவிடம் கிராத மூர்த்தி அறக்கட்டளை செயலாளர் அச்சு சாமி வழங்கினார்.இந்த இரண்டு வாள்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தபின்னர் பந்தளம் அரண்மனை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் காட்டூர் ஐயப்பன் கோவில் தலைவர் துளசிதாஸ், நிர்வாகி வாசுதேவன் கிராதமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள் சிவனேசன், விஜயராணி, ஷீபா, சூர்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை