ஐஏஎஸ். ஐபிஎஸ் தேர்வில் பெயில் ஆனவர்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம்: ‘மேலும் பல வாய்ப்புகள் உள்ளன’

புதுடெல்லி: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 545 ஆண்கள், 216 பெண்கள் என மொத்தம் 761 பேர் வெற்றி பெற்றனர். பீகாரை சேர்ந்த சுபம் குமார், மத்திய பிரதேசத்தின் ஜக்ரதி அவஸ்தி முதல் மற்றும் 2ம் இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தோல்வி அடைந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் டிவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர், `யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறாத இளைஞர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் திறமையானவர்கள் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதே நேரம், ஆய்வு மேற்கொள்வதற்கான பல்வேறு வாய்ப்புகள் நாட்டில் நிரம்பி கிடக்கின்றன. நீங்கள் எடுக்கும் முடிவு எதுவானாலும் அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்,’ என்று கூறியுள்ளார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!