ஏழை, எளிய மக்களின் மருந்து செலவில் ரூ.13,000 கோடியை சேமித்த மலிவு விலை மருந்தகங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள் மூலமாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உள்நாட்டில் தாயரிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு சார்பில் நாடு முழுவதும் ‘ஜன் அவுஷதி எனப்படும் மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டன. கடந்த 2013-14ம் ஆண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட மார்ச் 7ம் தேதி ஆண்டுதோறும் ஜன் அவுஷதி தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. ஜன் அவுஷதி நாளையொட்டி, நாடு முழுவதும் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைந்தோர்களிடம் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: ஜன் அவுஷதி பரியோஜனா மருந்தகங்கள் மருந்து மீதான விலை உயர்வு அச்சத்தை மக்களிடையே குறைக்கின்றது. நாடு முழுவதும் 8500 மலிவு விலை மருந்து கடைகள் உள்ளன.  இவை வெறும் அரசின் கடைகள் மட்டுமல்ல. சாதாரண மக்களுக்கான தீர்வு மையங்களாகும். புற்றுநோய், காசநோய், நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. ஸ்டன்ட்ஸ் உள்ளிட்டவற்றின் விலையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜன் அவுஷதி கடைகள் மூலமாக ஏழை மக்களின் ரூ.13,000 கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்….

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது