ஏற்காட்டில் 22.8 மி.மீட்டர் மழை

சேலம், ஜன. 10: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று சேலம் மாவட்டத்தில் காலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் முதல் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. பனி மூட்டத்தால் சிறது தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் ஏற்காட்டில் 22.8 மி.மீட்டர் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): ஏற்காடு- 22.8, இடைப்பாடி-16, தலைவாசல்-15, தம்மம்பட்டி-12, கரியகோவில்-12, ஆணைமடுவு-6, சங்ககிரி-2.2, ஆத்தூர், ஒமலூர்-1 னெ மொத்தம் 88 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை