ஏரியில் சடலமாக கிடந்த நகைக்கடை ஊழியர்

உளுந்தூர்பேட்டை, அக். 9: உளுந்தூர்பேட்டையில் ஏரியில் நகை கடை ஊழியர் சடலமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உ.கீரனூர் பெரிய ஏரியில் நேற்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், பூவராகவன் மற்றும் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் உளுந்தூர்பேட்டை அமைச்சார் அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்த கார்த்திகேயன் (42) என்பதும், கார்த்திகேயன் ஒரு நகை கடையில் வேலை செய்து வந்ததும், இவருக்கு மாசிலாமணி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களாக இவருடைய செல்போனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்காததால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கார்த்திகேயன் நேற்று ஏரியில் சடலமாக கிடந்ததுடன், அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது. இவர் எதற்காக ஏரிக்கு வந்தார்? யாராவது கொலை செய்துவிட்டு சடலத்தை ஏரியில் வீசிவிட்டு சென்றனரா? அல்லது இவரே அந்தப் பகுதிக்கு வந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு