ஏரிக்கரை, குளம், குட்டை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு

கூடுவாஞ்சேரி: கொளுத்தும் வெயிலில் ஏரிக்கரைகளில் 5 கிமீ வரை நடந்தே சென்று கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். அப்போது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி வல்லாஞ்சேரியில் பெரிய ஏரி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காரணைப்புதுச்சேரியில் பெரிய ஏரி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் நந்திவரம் பெரிய ஏரி, ஊரப்பாக்கம் ஊராட்சியில் கிளாம்பாக்கம் பெரிய ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை கலெக்டர் ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார். இதையொட்டி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு, கொளுத்தும் வெயிலில் ஒவ்வொரு ஏரிகளுக்கும் சுமார் 5 கிமீ வரை நடந்தே சென்று ஆய்வு செய்தார். அவருடன் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய்கிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் இருந்தனர். அப்போது கலெக்டர், வல்லாஞ்சேரியில் இருந்து நந்திவரம், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், மண்ணிவாக்கம், வரதராஜபுரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை தூர் வார வேண்டும். மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழாத வகையில், ஏரி, குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்….

Related posts

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்