ஏரிக்கரையில் பனை விதை நட்ட கல்லூரி மாணவிகள்

கிருஷ்ணகிரி, செப்.21: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், பனை விதைகளை நட்டு, ஏரிக்கரையை சுத்தம் செய்தனர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், கட்டிகானப்பள்ளி ஏரிக்கரை ஓரங்களில் பனை விதைகளை நட்டனர். முன்னதாக, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவி தேன்மொழி என்பவர் 65 பனை விதைகளை சேகரித்து வந்து கல்லூரி முதல்வர் கீதாவிடம் வழங்கினார். இதையடுத்து, கல்லூரி முதல்வர் தலைமையில், 100 நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கட்டிகானப்பள்ளி ஏரிக்கரையின் ஓரங்களில் பனை விதைகளை நட்டனர்.

கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி தேவி கோவிந்தராஜ், பிடிஓ சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசியர்கள் வள்ளிசித்ரா, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர். மேலும், தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், ஏரிக்கரையோரத்தில் கட்டிகானப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி